பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடி வரும் தொந்தி குறைய தொங்குகின்ற ஊளைச் சதை மறைய இக் காலணிப் பயிற்சிகள் உதவுகின்றன. குறிப்பு : இரும்புக் காலணியை உபயோகிக்க விரும்புகிறவள்களின் தூக்கும் வலிமைக்கேற்பவே அதன் எடைகள் இருக்க வேண்டும். முதலில் சாதாரண எடையுள்ள காலணியால் பயிற்சியைத் தொடங்கி, பெருகிய தேவையான அளவில் அதிக எடைகளைச் சேர்த்துப் பயன் பெறுக: பயிற்சி முறைகள் (1) ஏதாவது ஒரு நாற்காலியில் அல்லது முக்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு காலை முட்டியை மடக்காமல் விறைப்பாக மேல் நோக்கித் தூக்க வேண்டும். இதே போல் மறு காலையும் மாற்றி மாற்றிச் செய்தல் வேண்டும். (இனி வரும் எல்லாப் பயிற்சிகளையும் பல முறை செய்க) இப் பயிற்சி முழங்காலைப் பலப்படுத்துவதுடன், கெண்டைக் கால் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகின்றது. (2) நேராக நிமிர்ந்து நின்று, ஒவ்வொரு காலையும் முடிந்தவரை முன்நோக்கித் தூக்குதல், மறுகாலையும் முன் போலவே தூக்கி மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். (3) நேராக நிமிர்ந்து நின்று (முழங்காலை மடக்கி) காலை பின்புறமாக மடித்துத் தூக்குதல், கால்களை மாற்றி மாற்றிச் செய்யவும்.