பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--~-Lo-o-o-o- T o உடலழகு தரும் விளக்கம் உடம்பினுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என | உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே - திருமந்திரம் | o - இறைவன் இயற்கையைப் படைத் தான். . | இயற்கையின் ஊடே இயக்கங்கொண்டு இன்பம் பெற, ! ! இன்னுயிர்களைப் படைத்தான். இலங்கும் உயிர்களிலே! ஏற்றமிகு உயிராய், தோற்றத்திலும் ஊட்டத்திலும் பெருமைமிகு உடலுடன் மனிதரை வளர்த்தான். இறுதியிலே, இயற்கையையும் மனிதரையும் உறவாட விட்டு விட்டு, இயற்கையிலே எழிலாகவும் மனிதரிலே , நினைவுகளாகவும் கலந்து விட்டான் இறைவன். | சிரிக்கத் தெரிந்த, சிந்திக்க முடிந்த, சுவைபட பேசும் சக்தி வாய்ந்த அரிய பிறவியைப் பெற்ற மனிதன், பெரும் பேறு பெற்றவனாகவே விளங்கினான். வல்லமை . மிகுந்த மிருகங்களை, தன்னிலும் மிக்க வடிவமும்! கொடுமையும் உடைய உயிரினங்களைத் தன் அறிவால், ஆற்றலால் கொன்றான். வென்றான், காட்டைவிட்டு: விரட்டினான். அவற்றின் இடங்களிலே வீட்டைக் கட்டினான். வீர வாழ்வு வாழ்ந்தான். காலம் ஆக ஆக, காலம் மாற மாற, இயற்கையோடு கலந்திருந்த இனிய வாழ்க்கையை, செயற் கையாக மாற்றித் தன் னையும் தன் பரம்பரையையும் சீரழித்து விட்டான் மனிதன. கூரழித்துக் 9°--ts poss. –