பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A Bolāgotb ol-Lopo oupossib வலக்கையை மடித்து இடது கைத் தோளுக்கு உயர்த்த | வேண்டும். அதுபோல மறு கையாலும், மாறிச் மாறிச் செய்தல் நல்லது. சிறிது கடினமாக இருந்தாலும் சிரமம் பாராது செய்ய வேண்டும். - 12) கால்களைச் சேர்த்து வைத்திருந்து, இரண்டு கைகளிலும் எடைக் குண்டுகளுடன் தலைக்கு மேலே | கைகளை விறைப்பாக உயர்த்தி வைத்திருக்க வேண்டும். . பிறகு அங்கிருந்து முன் கையை வளைத்து, தலைக்குக் | கீழே முதுகுவரை (தோள் பட்டையைத் தொடும் வரை) 1 கொண்டு வரவேண்டும். - இதை ஒவ்வொரு கையாக மாற்றி மாற்றிச் . செய்யலாம். இரண்டு கைகளையும் இணைத்தாற்போல் ஏற்றியும் இறக்கியும் செய்யலாம். - 13) தரையில் மல்லாந்து, தலைக்குப் பின்புறம் கைகளை முழு அளவு நீட்டிப் படுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்து, குனிந்து (முழங் காலை 1 வளைக்காமல்) பாதங்களைத் தொடவேண்டும். பிறகு முன்போலவே படுக்க வேண்டும். 14) மல்லாந்து தரையில் படுத்து, மார்புக்கு மேலே கைகள் நீளும் வரை எடைகளைப் பிடித்து பிறகு ஒரு கை முன் பக்கம் தொடைப் பக்கம் வர, இன்னொரு கை தலைப் பக்கம் செல்லுமாறு பிரித்து ஏற்றி இறக்கிட வேண்டும். இப் பயிற்சி அரை வட்டச் சுழற்சி போல் அமைய வேண்டும். குறிப்பு : எல்லா பயிற்சிகளையும் பலமுறை செய்க 10 பவுண்டு அல்லது 8 பவுண்டு எடையுள்ள குண்டுடன் செய்க. 5 பவுண்டுள்ளதாக இருந்தாலும் ! பரவாயில்லை. பயிற்சியைத் தொடரலாம். பயிற்சிகளை அவரசப்படாமல், நிதானமாக ஆர்வம் குறையாமல் செய்திட வேண்டும்.