பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Al-Tâl-i são. கைப்பிடிகளைக் கொஞ்சம் அகலமாகப் பிடித்திருப்பது நல்லது. இடுப்புப் பகுதியானது எக்காரணத்தை முன்னிட்டும் நகரவோ அசையவோ கூடாது (40 பவுண்டிலிருந்து தொடங்குக) மூச்சு : மார்புக்கு மேல் எடை இருக்கையில், மூச்சை இழுத்து, தலைக்கு பின்புறம் போகும் வரை வைத்திருந்து பிறகு, திரும்பக் கொண்டு வரும் வரை மூச்சை வைத்திருந்து, அதன்பிறகு பழைய நிலைக்கு வந்த பிறகே மூச்சுவிட வேண்டும். - பயன் : தோள் பட்டைகளுக்கும் மார்புக் கூட்டிற்கும், விலா எலும்புகளுக்கும் வலுவூட்டக்கூடிய ஒன்று, மார்பினை விரித்து மார்பறைகளை நன்றாக அழகூட்டி விரிவடையச் செய்யும். 5. மல்லாந்து கைப்பிடி உயர்த்துதல் - (Bent Barm Pull over) மல்லாந்து படுத்திருந்து, கம்பியை அருகே இருபுறமும் பிடித்து மரபுக்கு மேலே உயர்த்தி, அங்கிருந்து தலைக்குப் பின்புறம் முகத்தருகே முழங்கை நீளும் வரை கொண்டு சென்று, அதன் பிறகு பலகைக்கு