பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 14

அற்புதத்தையும், அவனது ஆற்றலையும் கண்டு, காண்பவர் அனைவரும் கைகொட்டி ஆரவாரித்து, அவனைப் பாராட்டுவார்கள். அதற்குக் கம்பு நடை என்று கூறுவார்கள்.

இந்த நாகரிக செருப்பும் ஷலிவும் (Shoes இப்பொழுது கம்பு நடையாகத்தான் காட்சியளிக்கிறது. அரை அடி உயரத்திற்கு அடிக் கட்டையை வைத்து அமைத்த செருப்புக்களில், தங்கள் கால்களை திணித்துக் கொண்டு. தள்ளாடித் தள்ளாடித் தடுமாறி தடுமாறி, சில சமயங்களில் நடப்பதற்காகப் போராடிப் போராடி நடக்கின்ற குள்ளமான ஆண்களையும் பெண்களையும் பார்த்திருக்கிறோம். -

இவ்வளவு சிரத்தை எடுக்துக் கொண்டு, ஏனோ இப்படி சிரமப்படுகின்றார்கள்? அவர்கள் கணுக்கால்கள் வலிக்கின்றன. தப்பித் தவறி மேடு பள்ளத்தில் கால் வைத்து விட்டால், ஒருவர் முகங்குப்புற கூட கவிழலாம் அல்லது கணுக்கால்கள் பிசகிக்கொள்ளலாம். இத்தனை இடர்பாடுகள் இருக்கின்றன என்று தெரிந்த பிறகும் அவர்கள் ஏன் கட்டை மேல் நடக்கின்றார்கள்?

தங்களை உயரமானவர்களாகக் காட்டிக் கொள்ளத்தான் தங்களை உயரமானவர்கள் என்று மற்றவர்கள் எண்ணினாலே, சொன்னாலே தாங்கள் மதிக்கப் பட்டிருக்கின்றோம். என்று உந்துகின்ற பெருமை உணர்வினாலேயே அவர்கள் அப்படி நடந்து கொள்கின்றார்கள். அதனால்தான் உயரமானது ஒருவருக்கு எவ்வளவோ தன்னம்பிக்கையை அளிக்கிறது என்கிறோம்.

ஒரு சிலர் இதனைத் தன்மானப் பிரச்சினை என்றும் கருகின்றார்கள். உயரமாக இல்லையே என்று கவலைப்படலாம். அதற்காகக் கலங்கத் தேவையில்லை. குள்ள மாக