பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

வளத்தில் திருப்தியுடையவராய் வாழ்ந்திட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள், தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் கீழ்க்காணும் பயிற்சிகளை செய்து வந்தால் நிச்சயம் எதிர்பார்த்த பலனை அடைய முடியும்.

உடற்பயிற்சி என்றதும், உடலை முறுக்கி உறுப்புக்களை கசக்கி, கஷ்டப்படுத்தி, கட்டாயமான கடுமை வேலைகளாக இருக்கும் என்று தான் எல்லோரும் நினைக்கின்றனர்.

பயிலுதல் என்றால் தொடர்ந்து செய்தல் என்று அர்த்தம். உடலுக்குப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பக்குவப்படுத்துதல் என்று அர்த்தம்.

உடற்பயிற்சி என்பது உடலுக்கு பதமாக, இதமாக சுகமாக இருக்கவேண்டும் என்பது தான் விதிமுறை. உடம்புக்கு வலி ஏற்படுவது போல பயிற்சிகளைச் செய்யக் கூடாது.

உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவது போல, உறுப்புகளுக்கு மறுமலர்ச்சி உண்டாவது போல, பயிற்சிகளைச் செய்யவேண்டும்.

உடற்பயிற்சியை ஏனோதானோ என்று செய்யாமல், விரும்பிச்செய்யவேண்டும். விரும்பிச்செய்யும் எந்தக் காரியத்தையும் உடம்பு உவந்து ஏற்றுக்கொள்கிறது என்பது தான் உண்மைத் தத்துவமாகும். -

தேகத்தில் தடிக்காமல் சீராக இருந்தால், உயரமானவராக இருக்கின்ற மனத்திருப்தியையும் அளிக்கும். அத்தகைய அரிய ரஷ்யப் பயிற்சி முறையினை அடுத்தப் பகுதியில் காண்போம்.