பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆசனங்களின் அரிய பணி

யோகாசனம் செய்கின்ற முறைகளிலும் கூட. நாம் மேற்கூறிய பயன்களை பெற முடியும் என்று. ஆசன வல்லுநர்கள் பலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆசனம் செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்களின் வசதிக்காக, ஆசனங்கள் மூலமாக பயன் பெறட்டும் என்பதற்காக, ஆசனங்கள் செய்யும் முறைகள், அதனால் உண்டாகும் பயன்கள் ஆகியவற்றை விரிவாகக் கூற முற்பட்டிருக்கிறோம். பயன் பெறவும் அழைக்கிறோம்.

ஆசனப் பயிற்சிகள் செய்வதின் நோக்கம், உடல் உறுப்புக்களின் வளர்ச்சிக்கு உதவும் பிட்யூட்டரி சுரப்பியை, இயற்கையான முறையில் ஊக்குவித்து. அதன் மூலம் உயரமாக வளர்வதற்கேற்ற வழியினை அடையும் உபாயமாகத்தான் இருக்கிறது என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே இனி கொடுக்கப் போகின்ற ஆசனப் பயிற்சிகளை, மிகவும் கருத்துடன் புரிந்துக்கொண்டு கவனத்துடன் செய்து வரவும். ஆசனங்களை அவசரமின்றி, மிகவும் பொறுமையுடனும், இடைவிடாமல் தொடர்ந்தும் செய்து வந்தால் உடல் அமைப்பில் நல்ல வளர்ச்சியைப் பெறுவதுடன் உடல் நலத்திலும் உன்னதமான முன்னேற்றம் காணலாம்.

ஆசனம் செய்யப்புகுமுன் ஒரு சில முக்கியமான குறிப்புகள் தருகிறோம். செய்யக் கூடாது என்று எழுதியிருப்பதை நிச்சயம் நீங்கள் தவிர்த்துவிட வேண்டும். எச்சரிக்கையாகவே முன்கூட்டியே இதனை உங்களுக்குக் கூறுகின்றேன். ஏனென்றால் ஆர்வத்தினால் அவசரப்பட்டு, முரட்டுத்தன.ாக ஆசனம்,