பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

அதுவரை மூச்சை உள்ளேயே இருத்தி வைத்திருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை மிகவும் கடினமாகவோ அல்லது தலையை கஷ்டப்பட்டு அழுத்தியோ செய்யக்கூடாது. ஆரம்ப நாளில் சிறிது கடினமாகவும் இருக்கும்.

மிகவும் அமைதியாக, அவசரமில்லாமல் செய்ய வேண்டும். தொடர்ந்தாற் போல் இடது புறமாக கழுத்தை 5 முறை சுழற்றினால், பின்னர் மாற்று சுழற்சியாக, வலப்புற வழியாகவும் 5 முறை செய்ய வேண்டும்.

மூச்சை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் மிக முக்கியமானது என்பதால், இதில் தீவிர கவனம் செலுத்திட வேண்டும்.

2. யோக முத்ரா

முதலில் பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ளவும் பிறகு இரண்டு கைகளையும் பின்புறமாகக் கொண்டு வந்து வலது கை மணிக்கட்டுப் பகுதியை இடது கையால் பற்றிப் பிடித்துக் கொள்ளவும். - -

கைகளைப் பிடித்துக் கொள்வதை இதமாக இருப்பதுபோல் பிடித்திருக்கவேண்டும். கைகளை வலிந்து, இறுக்கிப் பின்னிப் பிடித்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு கைகளை சேர்த்துக் கொண்ட பிறகு தான் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.