பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

இதுபோல் மூன்று அல்லது நான்கு முறை குனிந்து நிமிரவும்.

நிமிர்ந்தவுடன் முதுகுப்பகுதி தலை, கழுத்து எல்லாம் ஒரே சீராக ஒரு நேர்க் கோட்டில் இருப்பது போல வைத்திருக்கவும். உறுப்புக்களை ஆட்டி அசைத்து அவசரப்பட்டு இந்தப் பயிற்சியை செய்யக் கூடாது.

இந்தப் பயிற்சியினால் குடற்பகுதிகள் அழுத்தப் பெற்று. உள்ளிருக்கும் மலப்பகுதியை எளிதில் வெளியேற்றும் வகையினால் வலிமையும் வாய்ப்பும் பெறுகின்றன. அதனால் சிறந்த உடல் நலம் பெறவும், தண்டுவடம் நெகிழும் தன்மை பெறவும் வழிவகைகள் கிடைக்கின்றன.

முதலில் இந்த ஆசனப் பயிற்சியை செய்வதற்கு சிரமமாக இருந்தாலும், செய்யச் செய்ய எளிதில் கைவரப் பெறலாம். மிக கவனத்துடன் இந்தப் பயிற்சியை செய்யவும்.

3. பச்சிமோத்தாசனம்

முதுகுப்புறத்திலுள்ள பின்புறத்தசைகள் அனைத்தையும் முன்புறமாக வளைத்து மேற் கொள்கின்ற இருக்கை முறை என்பதை குறிப்பது தான் பச்சிமோத்தாசனம் என்பதாகும்.

செய்முறை: விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் நீட்டி தலை முதுகுப்பகுதி அனைத்தும் நேரே இருப்பதுபோல் நிமிர்ந்து உட்காரவும். முழங்கால் இரண்டும் இணைந்தாற்போலவே முதலில் இருக்க வேண்டும்.