பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்தி இடுப்பை முன்புறமாக வளைத்து, முன்பாதங்களைத் தொடுவதற்காகக் குனிய வேண்டும். குனிந்து கட்டை விரல்களையும் பிடித்துக் கொள்வதோடல்லாமல், மேலும்குனிய வேண்டும்.

இரண்டு கைகளுக்கிடையிலும் முகம் மேலும் தாழ்ந்து குனிந்து, முழங்கால்களைத் தொடுவது போல வைக்க வேண்டும்.

குறைந்தது 5 முதல் 10 வினாடிகள் அப்படியே நிற்கலாம்.

மீண்டும் கைகளை உயர்த்தும்போது காதின்தொடர்பு அகற்றாமலேயே கைகளை உயர்த்த வேண்டும்.

முதலில் கட்டை விரல்களைத் தொடுவதே கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சிசெய்தால், எளிதாக முடியும்.

இதனை 5 அல்லது 7 முறை தொடர்ந்து செய்யலாம்.