பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

H.

அதாவது முழங்கைகள் அல்லது கைகளை பின்புறம் தரைப்பகுதியில் வைத்துச் சாய்ந்த பிறகு, முதுகுப் பகுதியில் ஒரு வளைவு போல அல்லது ஒரு பாலம் அமைவது போல, இடுப்பினை நன்றாக மேலே உயர்த்தி, தலையின் உச்சி பாகம் தரையில் இருப்பது போல படுக்க வேண்டும்.

பிறகு கைகளால் இரு கால் கட்டை விரல்களைப் பற்றிக்

கொண்டு, முன் கூறிய முறையில் இருக்கையில் இருக்க வேண்டும்.

குறிப்பு: சர்வாங்காசனாத்திற்குப் பிறகு, மத்சியாசனத்தைச் செய்ய வேண்டும். சர்வாங்காசனத்தில் முதுகெலும்பும் கழுத்தும் முன் பக்கமாக வளைகின்றன. அதில் வலியும் வேதனையும் இருந்தால், மத்சியாசனத்தில் முதுகெலும்பும் கழுத்தும் பின் பக்கமாக வளைவதால் தசைகளில் ஏற்படுகின்ற பிடிப்பும், விறைப்பும், முறுக்கும் மற்ற வலிகளையும் இது தீர்த்து வைக்கிறது.

சர்வாங்காசனம் செய்கின்ற 3ல் 1 பங்கு நேரத்தில்தான்

மத் சியாசனம் செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் அபிப்ராயப்படுகின்றார்கள்.

முதலில் மத்தியாசனம் செய்ய சிரமமாகத்தான் இருக்கும். பழகப்பழக நன்றாக உடல் வளைந்து கொடுக்கும்.

எண்ணிக்கை:

1. இரண்டு கால்களையும் பின்புறமாக மடித்து அதன் மேல் அமர்கின்ற வஜ்ராசன இருக்கையிலிருந்து பின்புறமாகப் படுக்கவும்.

2, வஜ்ராசன இருக்கைக்கு வரவும்.