பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

பெயர் விளக்கம்! சலபா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வெட்டுக்கிளி என்பது பொருளாகும்

இந்த ஆசனத்தைச் செய்யும்பொழுது பார்த்தால், ஒரு வெட்டுக்கிளியானது தனது வாலை உயர்த்திக் கொண்டிருப்பது போல தோற்றமளிப்பதால் தான் இதனை சலபாசனம் என்று பெயரிட்டு அழைத்தனர் போலும்,

புஜங்காசனத்தில் இடுப்புக்கு மேற்பட்டிருக்கும் மார்புப் பகுதிகளுக்கு வலிமை தரும் பயிற்சித் தன்மையைப் பார்த்தோம். இந்த சலபாசனத்தில், இடுப்புக்கு கீழே உள்ள கால் பகுதிகளுக்கு வலிமையூட்டும் தன்மையில் அமைந்திருப்பதை நாம் காணலாம்.

செயல் முறை: விரித்திருக்கும் விரிப்பில், முதலில் குப்புறப் படுக்க வேண்டும். அதாவது வாய், மூக்கு தரையில் படும்படி குப்புறப் படுத்திருந்து உள்ளங்கை மேற்புறம் பார்ப்பது போல இருத்தி, கைகள் இரண்டையும் உடல் பக்க வாட்டில் வைத்து நீட்டி இருக்க வேண்டும்.

இப்பொழுது மூச்சை மெதுவாக உள்ளேயிழுக்க வேண்டும். இப்பொழுது உடல் முழுவதையும் விறைப்பாக வைத்துக் கொண்டு. கால்களை மட்டும் அதாவது முதுகெலும்பின் கீழ்ப் பகுதி நுனிவரை (Sacrum) மேலே உயர்வது போல தூக்கி உயர்த்த வேண்டும். (கைகளை மூடி இறுக்கிக் கொண்டால், கால்களை மேலே தூக்க உதவும் என்பது ஒரு சிலர் அபிப்ராயமாகும்).

உடலை வேதனைப்படுத்தாமல், இவ்வாறு கால்களை மேலே தூக்க வேண்டும். (படம் பார்க்கவும் அப்படி தூக்கிய நிலையில் உடல் எடையானது, தரையோடு தரையாக இருக்கின்ற