பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

10 புஜங்காசனம்

பெயர் விளக்கம்: புஜங் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் பாம்பு என்பது பொருளாகும்.

இந்த ஆசனத்தை செய்து முடித்த நிலையில் ஒருவரைப் பார்க்கும் பொழுது, அவரது உயர்த்திய இடுப்பு கழுத்து, தலை இவற்றைக் கூர்ந்து கவனித்தால், செதில்களின் ஆதாரத்தில் தலையைத் தூக்கிப் படம் விரித்திருக்கின்ற பாம்பினைப்போல தோற்றம் தரும் என்பதால், இதற்குப் புஜங்காசனம் என்று பெயரிட்டிருக்கின்றனர்.

செய்முறை விரிப்பின் மீது முதலில் குப்புறப் படுக்க வேண்டும். விரல்கள் முன்புறம் நோக்கி இருப்பது போல உள்ளங்கைகளைத் தோளுக்குக் கீழே முழங்கைகளை மடித்து வைத்திருக்க வேண்டும்.

கால்களின் முன் பாதங்கள் (Toe) பின்புறம் நோக்கி

இருப்பது போல வைத்துப் படுத்திருக்க வேண்டும்