பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எடையிலா வெறுங்கை பயிற்சிகள்

1. 1. இடையிலே பனிரெண்டு அங்குலம் இடைவெளி இருப்பது போல, கால்களை விரித்து வைத்து. கைகள் இரண்டும் தொடைப் பகுதியில் உள்ளங்கை பட்டுக் கொண்டிருப்பது போல் விறைப்பாக நின்று கொள்ள வேண்டும்.

2. நன்றாக மூச்சை உள்ளே இழுத்துத்கொண்டு கைகளை தலைக்கு மேலே மேற்புறமாக உயர்த்த வேண்டும்.

கைகளை உயர்த்தும், பொழுதே குதிகால்களை உயர்த்தி, பாதங்களில் நிற்க வேண்டும். பிறகு கைகளை தொடைகளுக்கு

முன்புறம் கொண்டுவந்தவுடன், குதிகால்களில் நிற்கவும். அதே சமயத்தில் மூச்சை வெளியே விட்டுவிட்டு இயல்பாக நிற்கவும்.

குறிப்பீஃகளை மேலே உயர்த்தும்பொழுது மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். பயிற்சி முடியும் பொழுது மூச்சை வெளியே விட வேண்டும்.