பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

இப்பொழுது நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு வலது காலைக் கொண்டு போய் நன்றாக இடுப்பை வளைத்து நீட்டியிருக்கும் இடது கை உள்ளங்கையைத் தொட வேண்டும். பிறகு முன்பு படுத்திருந்த நிலைக்கு வந்ததும் மூச்சை வெளியே விட வேண்டும்.

அதே போல், இடுப்பை நன்றாக வளைத்து இடது காலால் வலது கையைத் தொட வேண்டும். மூச்சினை இழுப்பதும் வெளி யே விடுவதும் முன்போலவே தான்.

எக்காரணம் கொண்டும் கைகளை முன்னுக்குக் கொண்டு வரக்கூடாது. இருந்த இடத்தில் வைத்தே தொட வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் பரவாயில்லை. முடிந்தவரையில் செய்யவும். பழகப் பழக பயிற்சி எளிதாவி விடும்.

எண்ணிக்கை 10 ல் தொடங்கி பழகப் பழக அதிகப் படுத்திக் கொள்ளவும். வெறும்வயிற்றில்தான் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும்.

8 மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும். கைகளைப் பக்கவாட்டில் விரித்து வைக்கவும்.

நன்றாக மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும். இப்பொழுது கால்களை சேர்ந்தாற்போல் உயர்த்தவும். 45 டிகிரி அளவுக்கு வந்ததும் ஒரு சிறிது நேரம் நிறுத்தி, பின் தரைப்பக்கமாக

இறக்கி, தரையில் படாமல் ஒரு சிறிது நேரம் நிறுத்தி, செங்குத்தாக உயர்த்தவும். அங்கிருந்து மீண்டும் தரைக்குக் கொண்டு வந்து

தரையில் படாமல் நிறுத்தி. மீண்டும் மேல் நோக்கிக்கொண்டு வந்து பின்புறமாக எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ