பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 74

கொண்டு சென்று, பின்னர் தரைக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

இந்த மூன்று முறைகளையும் ஆரம்பத்திலேயே செய்தும், செய்ய முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கு ஒரு வழி.

முதலில் 45 டிகிரி அளவுக்கு கால்களை உயர்த்தி, தரைக்குக் கொண்டு வந்து தரையில் படாமல் நிறுத்தி, மீண்டும் மேலே 45 டிகிரிக்கு உயர்த்துவதை 10 முறை செய்து பழகவும்.

அதேபோல் 90 டிகிரி அளவுக்கு கால்களை மேலே ஏற்றி இறக்கிச் செய்யவும்.

மூன்றாவது பயிற்சியாக, கால்களை தலைக்குப் பின்புறமாகக் கொண்டு செல்லவும். ----

மூச்சிழுக்கும் பயிற்சியையும் முன்னர் கூறியதுபோல முறையாகச் செய்யவும்.

அவசரப்பட்டு பயிற்சிகளைச் செய்யாமல், பொறுமையுடனும், நிதானத்துடனும் விருப்பத்துடனும் செய்யவும். நல்ல பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் செய்து நல்ல பயன்களைப் பெறவும்.

அடுத்து, வளர்ச்சிக்குரிய உணவு முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.