பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் உயரமாக வளரலாம் 78

வாழ்கின்ற காலம் வரை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற குறிக்கோள்களுக்குத் துணை நிற்பது வளமான உடல் தான்.

நீங்கள் செய்யப் போகின்ற பயிற்சிகள் வளமான உடலைத் தர இருக்கின்றன. அத்துடன் உறுப்புக்கள் எல்லாம் உன்னதமான வளர்ச்சியையும் பெற இருக்கின்றன.

உங்களின் உண்மையான முயற்சி நிச்சயம் பலிக்கும்.

வெற்றியைக் கொடுக்கும்.

ஒரு காரியம் வெற்றி பெற உதவுபவை மூன்று. ஒன்று அறிந்து கொள்ளும் ஆர்வம். மற்றொன்று தெரிந்து கொண்டதில் தெளிவு. மூன்றாவது தொடர்ந்து இடைவிடாது செய்யும் முயற்சி.

உயரமாக வளர வேண்டும் என்ற தேவையின் காரணமாக நீங்கள் கொண்டிருந்த அளவிலா ஆர்வம்: இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனை நீங்கள் காரியத்தில் கொண்டு வரும்பொழுது சுற்றத்தார் சூழ்நிலைகள், மற்றும் வசதியின்மை, தன்னம்பிக்கையின்மை எல்லாமே உங்களை குழப்பிவிடும். குதர்க்கம் பேசி உங்கள் குறிக்கோளை மாற்றிவிட

முயலும்.

நீங்கள் இரண்டு நினைவுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஒரே லட்சியம் என்ற உன்னதஉணர்வுடன் நிமிர்ந்து நில்லுங்கள். நெஞ்சுரத்துடன் பயிற்சிகளைத் தொடருங்கள். நாளாக நாளாக, உங்கள் முயற்சி நிச்சயம்வளரும் என்ற நம்பிக்கை பொய்யாகாமல்,

உயரும் பொழுது நீங்கள் பெறுகின்ற ஆனந்தத்திற்கு அளவேது