பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 D நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இடுப்பும் புவிஈர்ப்புத்தானத்துக்காக முன்னுக்கு வரும். (படம் காண்க). *


இவ்வாறு உடல் உச்ச உயரத்திற்குச் சென்ற உடன், அங்கிருந்து விரிந்துள்ள இரண்டு கால்களையும் கை களையும் ஒன்றுபடுத்திக் கொண்டு, கால்களை எவ்வளவு நீட்டி விட முடியுமோ, அந்த அளவு முன்னாலேயே நீட்டி விடவேண்டும்.


4. காலூன்றல் (Landing): குதிகாலால் தான் மணலில் குதிக்க வேண்டும். குதிகால் மணலில் பட்ட உடனேயே, தலைக்கு மேற்புறமாக இருந்த கைகள் இரண்டும் முன்புறம் வர முழங்கால் வளைந்து கொள்ள பின்புறம் விழுந்து விடாதவாறு, கால்களை ஊன்றி, பிறகு முன்புறமாக விழ வேண்டும்.


மேற்கூறியவாறு தாண்டுகின்ற ஒருவர் 1% காலடி அதிகமாகக் காற்றிலே நடக்கிறார். இவ்வாறு காற்றிலே நடக்கக் கற்றுக்கொள்வதை கட்டாந் தரையிலே செய் தால், விழுகிற அடியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆகவே, தண்ணிரில் ஓடிவந்துக் குதித்து, கொஞ்சங் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளலாம். ரோமன் வளையத்தில் ஊஞ்சலாடும்போது, அல்லது கம்பியில் விளையாடும் போது (Bar) கற்றுக் கொள்வது இன்னும் எளிதாக இருக்கும்.


இதற்கான பயிற்சிகளை எவ்வாறு செய்ய வேண்டும்?


விரைவாக ஒடுகின்ற ஆற்றலும், வலிமையுடைய


கால்களும், வலுவுள்ள அடிவயிறும் இந்தப் போட்டிக்கு மிகமிக அவசியம்.