பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 125


தாண்டுகின்ற முறையை விளக்கிக் கூறுங்கள்?


உதைத்தெழும் இடத்தை நோக்கி ஓடி வருகின்ற முறை மேற்கத்திய முறை போலதான் என்றாலும், ஓடிவருகின்ற கோணத்தின் அளவு (Angle) 30 டிகிரி, அந்தக் கோணத்தில் ஓடிவந்ததும், இடதுகால் உதைத் தெழுகிறது. உடனே, உடல் மேலே எழும்ப, வலதுகால் மேலே உயர்ந்து. குறுக்குக் குச்சிக்கு மேலே விரிகிறது. அதேபோல, அதே சமயத்தில், இடதுகால் மேலே போகி றது. இரண்டு கால்களும் மேலே விரிந்திருக்கும்போது வயிறு, மார்பு, முகம் மூன்றும் குறுக்குக் குச்சியைப் பார்த்தபடி இருக்க, உடலின் சமநிலை சக்தி குச்சிக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. (தொப்புள் குச்சிக்கு அருகில் இருக்கிறது). அப்பொழுது இடதுகை வளைந்தும், வலதுகை விரிந்தும் இடுப்புக்கு மேலேயே நிற்கிறது.


இந்த நிலைக்குப் (Position) பிறகு, தலை திரும்பும், இடதுகால் மேலே இன்னும் கிளம்பும். அப்பொழுது உடல் குச்சியைக் கடக்கும். குச்சியைக் கடந்ததும் உடலும் வலது காலும் மண் நோக்கி இறங்கும். அந்த வலது காலை மண்ணிலே ஊன்றி, வலது கையாலும் ஊன்றி, முதுகுப் புறமாக விழுந்து உருள வேண்டும்.


இதுகாறும் கூறியதுபோல, இடது காலால் உதைத்து எழுந்து, வலது காலினால் தரையில் ஊன்றிதாண்டலை முடிப்பதை நினைவுகொள்ள வேண்டும். குறுக்குக் குச்சிக்கு வெகு சமீபத்தில் இடதுகை இயங்கும் அப்பொழுது குச்சியைத் தட்டி விடாதவாறு கவனித்துத் தாண்ட வேண்டும்.