பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


மைய பாகத்தை அணைத்திருக்க, கட்டை விரல் நீண்டு, தட்டு விழாதவாறு சமநிலையைக் காத்திருக்க, சுட்டு விரலும் நடுவிரலும் அருகருகே விரிந்து நின்று தங்கள் முதல் மூட்டினால் (Joint) தட்டின் விளிம்பினைக் கவ்வி யிருக்க, மற்ற இரு விரல்களும் இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி, தட்டினைப் பரவலாகத் தழுவியிருக்கும். தட்டின் நடுவட்டத்திற்குப்பின்புறமாக உள்ளங்கை இருப்பதோடு, தட்டு முன்கையிலும், மணிக்கட்டின் ஆதரவிலுமாக இருக்க வேண்டும்.


தொடக்கத்தில் விரல்கள் தட்டினைத் தளர்த்திப் பிடித்து, அதே சமயத்தில் உறுதியாகவும் பிடித்திருக்க வேண்டும்.


எறியும் முறை: வட்டத்திற்குள் தட்டுடன் நின்று எறியத் தயாராகும் ‘எறியும் உடலாளர், தன் தோள்களின் அகல அளவு கால்களை அகல விரித்து உறுதியாக வைத்து, எறியப் போகின்ற பகுதிக்குத் தன் முதுகை காட்டுவது போலக் குதிகால் தரையில் ஊன்றியிருப்பது போல வலது காலை வைத்து, இடது காலை முன் பாகத்திலே நிற்க வைத்து தட்டுள்ள கையை பக்க வாட்டில் இடுப்பருகில் வைத்து நிற்க வேண்டும்.


பிறகு தட்டின்மீது நல்ல பிடிப்பு (Grip) ஏற்படு) வரையில் இறுக்கிப் பிடித்து, இடமிருந்து வலம் வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என்பதாக முன்புறமும் பக்கவாட்டிலும் வருவது போல, மேலும் கீழுமாகத் தட்டினை ஏற்றி இறக்கிச் செய்யும் போது கைக்கு நல்ல பிடிப்பு கிடைத்து விடும். அந்தச் சமயத்தில் தட்டு உடலின் பக்கவாட்டில் வந்ததும், வலது காலி