பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அந்த எறி (Throw) அமையும். நமக்கு காற்று சாதகமாக இருந்தால், அதாவது காற்றடிக்கும் திசைப் பக்கமாகவே எறிய வேண்டி இருந்தால், இன்னும் கொஞ்சம் உயரமாக எறியவேண்டும்.


வலது கையால் எறிவோர், கடிகாரம் சுற்றும் முறை போல தட்டினை சுழற்றி எறிய வேண்டும். இடதுகையர் எறிவதாக இருந்தால், கடிகாரம் சுற்று முறைக்கு எதிர்த்திசையில் இருப்பது போல எறிய வேண்டும்.


அந்த வட்டத்திற்குள் எவ்வளவு வேகமாக சுழன்று எறிய இயலுமோ, அந்த அளவுக்கு சுழன்று, நிதானம் இழக்காமல், வட்டத்தின் முழு அளவையும் பயன்படுத்தி எறிய வேண்டும்.


எவ்வாறு தட்டெறியும் முறைகளை, பயிற்சிகளைப் பழக வேண்டும்?


முதலில் பதட்டப்படாமல் எறியப் பழக வேண்டும். பதட்டம் இல்லாமல் இருந்ததால்தான், ஒலிம்பிக் போட்டியில் தட்டெறிதலில் ஒருவர் வெற்றி பெற்றார். அந்த வரலாற்றை சிறிது கேளுங்கள். அவர்பெயர் ராபர்ட்கேரட் என்பது.போட்டி நடக்கும்வரை அவருக்கு சரியான எடையுள்ள தட்டும் தெரியாது; அதன் உருவ அமைப்பும் தெரியாது. தெரியாத ஒன்றை அவர் எப்படி எடுத்துப் பழகியிருப்பார்? கற்பனையிலே அதற்கு ஒரு உருவம் கொடுத்து, அதிக எடையுள்ள ஒரு வட்டமான இரும்புத்துண்டைப் பயன்படுத்தி அவர் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.


1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரத்திலே நடந்த முதல் ஒலிம்பிக் போட்டி, கிரேக்கர்களுக்கு உரித்தான