பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


அதிக சக்தியைப் பெறவே.இருக்கும் சக்தியையும் இழந்து விடுவதற்காக அல்ல.


ஒட்டத் தொடக்கத்தில் 6 அல்லது 7 காலடிவரை (Step) மெதுவாக ஒடத் தொடங்கி, பிறகு உச்ச வேகத் துடன் ஓடிவந்து, எறியும் கடைசி நேரத்தில், குறுக்குக் காலடியிட்டு (Cross Step), வேகத்தை நிறுத்தாமலும், நிதானமிழக்காமலும், உடலின் சமநிலைதவறிவிடாமலும் முழு பலத்தையும் உபயோகிக்கும் வழியிலும் எறிய வேண்டும். ‘குறுக்குக் காலடியை எவ்வாறு கற்றுக் கொள்ள வேண்டும்?


தோளுக்கு மேற்புறமாக வேலினை வைத்து, முன் கையால் தாங்கியவாறு ஒடி வரும்போது, குறுக்குக் காலடி இடுகின்ற இடத்தில் உள்ள அடையாளம் வந்த பிறகு, கீழ்க்கண்ட முறையில், காலடி இடவேண்டும்.


அடையாளத்தைக் கண்ட உடனேயே, வலது காலில் குறுக்குக் காலடியைத் தொடங்க வேண்டும். வலது காலில் ஆரம்பித்த உடனேயே, தோளுக்கு மேலே உள்ள வேலினை, வலப்புறமாக தாழ்வாகக் கொண்டு வந்து, முழங்கையை ஒரு சிறிது வளைக்க அப்பொழுது இடக்கை மடங்கி அடிவயிற்றின் முன்வந்திருக்கும்.


உடனே வலது காலின் முன்னே கொஞ்ச அளவு இடது காலை ஊன்ற, பிறகு வலது காலால் முன்னே உள்ள இடது காலுக்குப் பின்புறமாகவும், உடலைப் பின்புறமாக இழுத்தும் குறுக்குக் காலடியை வைக்க வேண்டும். அப்பொழுது வலது கை இன்னும் தாழ்ந் திருக்க, தோளிரண்டும் ஒர் நிலையில் இருக்க, வேல்