பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 167


ஓடிவந்து, வலது காலை ஊன்றி, அதன் பின் இடது காலை அருகே வைத்து, பிறகு வலது காலைப் பின்னுக்கு இழுத்து ஊன்றி, அதன் பிறகு இடது காலை மீண்டும் வைத்து எறிய வேண்டும். இதை இவ்வாறு கற்றுக் கொள்ளலாம்.


குறுக்குக் காலடியைக் கற்கும் பயிற்சி


ஒன்று என எண்ணும்போது வலது காலை ஊன்றல். இரண்டு என எண்ணும் போது இடது காலை, வலது கால் முன்னே வைத்தல்.


மூன்று என எண்ணும்போது வலது காலை, இடது கால் பின்னே குறுக்கே வைத்தல்.


நான்கு என எண்ணும்போது இடது காலை நீட்டி முன்னே வைத்தல்.


ஐந்து என எண்ணும்போது எறிதல். இவ்வாறு எண்ணி எண்ணி குறுக்குக் காலடி வத்து, நின்று கொண்டே எறியத் தொடங்கினால், பிறகு து வந்து எறியும் போது, தடங்கல் இல்லாமலும் தவறு செய்யாமலும் எறிய முடியும்.


வேலுடன் ஒடியும், வேல் இல்லாமல் ஓடி வந்தும் சரியாகக் குறுக்குக் காலடி வருகிறதா என்பதைப் பலமுறை பரிசோதித்துப் பழகவும், வேகமாக ஓடிவந்து, பிறகு ஒட்டத்தை நிறுத்தி நின்று எறிவதில் புண்ணியமே


ul- 14,5)%U).


கையை முழுதும் நீட்டி எறிக. - இதற்கான பயிற்சிகளில் முக்கியமாக, கைகளுக்கு அதிகமாக எடைப் பயிற்சிகள் அவசியம். அடிவயிறு,