பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 29


இனி, ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிய உங்கள் ஐயத்தினைத் தெளிவுபடுத்துகின்ற வினாக் களுக்கு விடை தருகின்றேன்.


ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?...


ஒலிம்பியாவிலே முதன் முதலில் நடந்ததால் இதை ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் என்று அழைக்கிறோம். அமெரிக் ாவிலே இந் நிகழ்ச்சிகளை தட கள நிகழ்ச்சிகள் (Track பld Field Sports) என்றும்; இங்கிலாந்திலே உடலாண்மைப் போட்டிகள் என்றும்’ (Athletic Sports) என்றும் அழைக் கிறார்கள். இதிலே பங்கு பெறுவோரை உடலாளர்’ (Athlete) என்றும் குறிப்பிடுகின்றனர்.


குறிப்பு :- உடலின் சக்தியை ஆண்டு, உன்னதமாக லகுக்கு உணர்த்தும் சக்தி பெற்றவரை நாமும் உட லாளர் (உடல்+ஆளர்) என்றும், உடலின் ஆண்மையை விளக்கும் முகத்தான் எழுந்த போட்டி நிகழ்ச்சிகளை லாண்மைப் போட்டிகள், என்றும் இனி நாம் அழைப்போம்.


விளையாட்டுக்கள் (Games) என்றால் கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, வளைகோல்பந்துபோன்ற மற்ற ஆட்டங்களையும் குறிக்கும். விளையாட்டுக்கள் (Sports) என்றாலும் களிப்புடன் பங்குபெறுகின்ற நிகழ்சிகளைக் குறிப்பதால், இவை உடலாண்மைப் போட்டிகளையும் குறிக்கும். விளையாட்டு வீரர் (Sports man), ஆட்டக்காரர் ('layer) என நாம் இங்கு பாகுபடுத்திக் கொண்டால், நமக்குள் குழப்பம் ஏற்படாது என்று நினைக்கிறேன்.


உடலாண்மைப் போட்டிகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. ஒடுதல் 2.தாண்டுதல் 3, எறிதல்.