பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


யால் ஆர்வத்தால், ஆத்திரத்தால் உடல் ஒத்துழைக் காமலும் போகக் கூடும். எனவே, எதிரிகளை முன் விட்டுப் பின்னே போய் பிடிக்காமல், விரைவாக ஒடி முடிக்கும் வகையில் பழகுக...வெற்றி பெறுக


2. இடைநிலை ஒட்டம் (Middle distance)


இடைநிலை ஒட்டம் என்றால் என்ன? விளக்கமாகக் கூறுங்கள்?


குறுகிய துார விரைவோட்டத்திற்கும் 3000 மீட்டர் துரம் ஒடுகின்ற நெட்டோட்டத்திற்கும் இடைப்பட்ட துரமாக இருப்பதை இடைநிலை ஒட்டம் என்கிறோம்.


ஒலிம்பிக் ஒட்டப் போட்டிகளில், இதையும் விரை வோட்டம் போலவே எல்லோரும் ஒடி முடிக்கின்றனர். 800 மீட்டர், 1500 மீட்டர், ஒரு மைல் ஒட்டமான 1600 மீட்டர் பந்தயங்களை “இடைநிலை ஒட்டப் பந்தயம்” என்று நாம் கூறுகிறோம். ஏனென்றால் இந்தியாவில் அந்த அளவு தான் உடலாண்மைப் போட்டிகளிலும் விளையாட்டுத் துறையிலும் வளர்ச்சி உருவாகி இருக் கிறது.


இந்தியாவிலே ஏன் அந்த நிலை இருக்கிறது?


நம் நாட்டவர்கள் உழைப்பை விரும்புவதில்லை. அதிலும் உடலை வருத்தும் கடினமான உழைப்பை விரும்புவதில்லை. உழைக்க முயல்வதில்லை. உழைப்ப வரையும் வெறுக்கின்றனர். உதாசீனம் செய்கின்றனர். உலகப் புகழ் பெற வேண்டும். பெற்ற பிறவியில் பெரும் பேறு பெற வேண்டும். புகழோடு வாழ வேண்டும் என்ற