பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா D 61


இரண்டோ) இருக்கும். ஒவ்வொரு வட்டத்திற்குள் ஒடும் நேரம் எவ்வளவு என்று கணக்கெடுத்துக் கொண்டு, அந்த நேரங்களைக் குறைக்கும் வகையில் முயற்சியுடன் ஒடிப் பழகுதல் வேண்டும்.


கடைசி 200, 300 மீட்டர் துரத்தை விரைவோட்டம் போலவே ஒடினால் வெற்றி நிச்சயம். அந்த முறையை பின்பற்றுதல் நல்லது.


800 மீட்டர் ஒடும் போட்டியில் பங்கு பெறுவோ ருக்கு 1500 மீட்டர் ஒட்டமும் ஒரு மைல் ஒட்டமும் எளிதாக வரும் என்பதால் அதிலும் பங்குபெற முடியும்.


1896 ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஒட எடுத்துக் கொண்ட நேரம் 2 நிமிடம் 11 வினாடிகள்.1968ம் ஆண்டின் நேரம்1 நிமிடம் 44 வினாடிகள்.ஆக ஒட்டத்தில் உடலாளர்கள் ஒடிக் காட்டுகின்ற விரைவினை மனதில் கொண்டு ஒடிப் பழகுங்கள். வெற்றி உங்களைத் தானாகத்தேடி வரும்.


1500 மீட்டருக்கும் இதே முறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமா?...


இடை நிலை ஒட்டத்தில் 800, 1500, 1600 மீட்டர் துரமுள்ள பந்தயங்கள் இடம் பெறுவதால், முறை ஒன்று தான், ஆனால், இன்னும் எல்லா திறமையிலும் நிறைவு வேண்டும்.


ஒடி முடிக்கவேண்டிய துரமோ தூரம்தான். ஒட வேண்டிய முறையோ ஒரே வேகத்தோடுதான். சீரான வேகத்தோடு மட்டுமல்ல. சிறப்பான வேகத்தோடும் தான் ஒடிமுடிக்கவேண்டும்.