பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும் ஒலிம்பிக் வீரர் ஆகலாம்


“நீங்களும் ஒலிம்பிக் வீரர் ஆகலாம்” என்று உங்களை எல்லாம் அறை கூவி அழைக்கிறேன்.


“யானைக்குத் தன் பலம் தெரியாது” என்பார்களே. அந்நிலையில் இருக்கும் இந்நாட்டு மக்களை, தங்கள் சக்தி, தகுதி, திறமை அத்தனையும் மறந்து வாழ்கின்ற தன்மையை உணர்ந்து, பாருங்கள் நம் நிலையை! வாருங் கள்! பயிற்சி செய்யுங்கள் வீரராகுங்கள்! வெற்றிக் கேடயங் களையும் தங்கப் பதக்கங்களையும் பரிசாகப் பெற்றுத் தாருங்கள்? என்று இளைய சகோதரர்களையும் சகோதரி களைஸ்யம் அழைக்கிறேன்.


உற்றாரும் பெற்றோரும், இந்நிலையை உணரத் தொடங்கி விட்டால், இந்நாட்டின் புகழ் அகில உலக மெங்கும் கொடி கட்டிப் பறக்கும். ஆன்மத் துறையிலும், அறிவுத் துறையிலும் ஈடிணையற்று நம் நாடு விளங்கும் போது, விளையாட்டுத் துறையில் மட்டும் நம்மால் ஏன் பிறர் போற்ற வாழ முடியாது?


நாம் நம் திறமையைப் பயன்படுத்தவில்லை. நம் சக்தியை சரியான வழியில் செலவழிக்கவில்லை. தகுதியை வளர்த்துக் கொள்ளமுயலவில்லை என்பதுதான்