பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 89


வேண்டும் என்பதைக் கோடு போட்டுக் குறியிட்டு வைத்துப் பழகுதல் மிகமிக அவசியம்


முதலாமவரிடமிருந்து வலது கையில் குறுந் தடியைப் பெற்ற இரண்டாமவர், ஒடுகின்ற ஒரு சில காலடிகளுக்குள்ளாகவே (Steps) இடது கைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும், ஏனென்றால், அப்பொழுதுதான் முன்றாம் ஒட்டக்காரருக்குக் கொண்டு போய் வலது கையில் தர வசதியாக இருக்கும். ஏன் இடதுகையில் மாற்ற வேண்டும்? ஏன் வலது கையில் தர வேண்டும் என்றால், இடதுகையால் வாங்குபவரின் வலதுகையில் கொடுத்தால் தான், அவரை இடிக்காமல் ஓடி விட வசதியாக இருக்கும்.


வலது கையில் வைத்திருந்து, வலது கையில் கொண்டு போய் தரும் நிலையை நினைத்துப் பாருங்கள். ஒடிப்பாருங்கள்.இருவரும் மோதிக் கொள்வார்கள். கீழே விழநேரிடும். குழுவெற்றி வாய்ப்பை இழந்து விடும். அதனால் தான் குறுந் தடியை சரியாகக் கைமாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். என்பது புரியும்,


4வது கடைசி ஒட்டக்காரர் வலதுகையிலே வாங்கி, அப்படியே ஒடலாம். இடது கைக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் குறுந்தடி கீழே நழுவி விழுந்துவிடாமல், உறுதியாகப் பிடித்துக்கொண்டு ஒட வேண்டும்.


கையைப் பின்புறம் நீட்டி, குறுந்தடியைக் கீழே விழாமல் எப்படிப் பெறுவது என்று கேட்கலாம். அதற்கு இதோ பதில், இதே முறையைக் கையாளுங்கள்.


கைவிரிந்து, குவிந்து கிண்ணம்போல் அமைந்திருக்க, வலதுகை மடங்காமல், முழு அளவு பின்புறம் நீண்டிருப்ப