பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஒரு நாள் முழுதும் இதயம் உழைக்கின்ற உழைப்பின் மொத்த வலிமையைக் கணக்கிட்டால். 150 பவுண்டு எடையுள்ள ஒரு மனிதனை, ஏறத்தாழ 30,000 செ.மீ உயரத்திற்கு உயர்த்தித் தூக்கிச் செல்கின்ற வலிமை என்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 3000 கேலன் இரத்தத்தை உடல் முழுதுப் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு இருக்கிற இதயமானது, 70 ஆண்டுகாலம் உழைத்தால், ஏறத்தாழ, 7,70,00,000 கேலன்கள் இறைக்கின்றது. அது ஒரு பெரிய பிரமாண்டமான தொட்டியை நிரப்பிட முடியும் என்று கூறுகின்றார்கள்.

இதயத்தின் ஒரு மணிநேர உழைப்பு, ஒரு மனிதனை 5 அடுக்கு மாடிக்குத் தூக்கிச் செல்லும் சக்தி படைத்ததாகும்.

இரண்டு இதயங்கள் சேர்ந்து வாழ் நாள் முழுதும் உழைக்கின்ற உழைப்பு, ஒரு லாரியை இரண்டு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் சுற்றி இழுத்து வருகின்ற சக்தியைப் படைத்திருக்கிறது என்று அறியும் பொழுது, இந்த இதயம் எத்தனை சிறிது ஆற்றல் எத்தனை பெரிது என்று ஆச்சரியத்தில் அல்லவா மூழ்கிப் போகிறோம்!

பகல் முழுதும் உழைக்கின்ற இதயத்திற்கு கொஞ்சமாவது ஓய்வாக உழைக்க நாம் தான் உதவ வேண்டும், வேட்டை நாயை விரட்டுவது போல, உடம்பை விரட்டிக் கொண்டிருந்தால் எப்படி?

அந்த ஓய்வுதான் உறக்கத்தின் மூலம் கிடைக்கிறது. உறக்கம் என்பது என்ன? இதை ஒரு ‘தற்காலிகமான