பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வேண்டும்? சிறு கோவணம் கட்டிக்கொண்டால் நல்லது என்று அவர் நினைத்துக் கொண்டாராம்.

செயல், ஆசைக்கேற்ப நடந்தேறி விட்டது. ஒருநாள் காலையில் அவரது கோவணத்தைக் காயப் போட்டிருந்த நேரத்தில், எலியொன்று கடித்துப் போட்டிருந்ததை அறிந்து, அவர் அதிகக் கோபம் அடைந்தார். சாபம் விடவில்லை. மாறாக ஒரு சபலம். பொல்லாத எலியை, பூனையை விட்டுக் கொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, எலியே இருக்காதல்லவா! ஆகவே, ஒரு பூனையைப் பிடித்து வளர்க்கத் தொடங்கினார்.

பூனைக்குப் பால் வேண்டுமே? பசியோடு எப்படி அது எலியைப் பிடிக்கும்? ஆகவே, பூனைக்குப் பால் வேண்டும் என்பதற்காக, பசுமாடு ஒன்றையும் கொண்டு வந்து விட்டார். பூனைக்குப் பால் கிடைத்தது. பசுவுக்கு இரை வேண்டுமே? அதனைக் கட்டிக்காத்து, குளிப்பாட்டி, புல் போட்டுக் காக்க அவருக்கு ஏது நேரம்? தவம் வேறு செய்ய வேண்டுமே? ஆகவே, மாட்டைப் பார்த்துக் கொள்ள ஒருவனை வைத்துக் கொண்டார்.

வந்த மனிதன் தனியாக வரவில்லை. தனக்குத் துணையாக ஒரு பெண்ணையும், மனைவியாகத் தான்-கூடவே அழைத்து வந்துவிட்டான். முனிவரின் ஆதரவில் அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள். பசு பால் தந்தது. பூனை குடித்து விட்டுக் காவல் காத்தது. எலியின் தொல்லை குறைந்தது. கோவணம் கடிபடாமல் காப்பாற்றப்பட்டது. இந்தத் தொடர் சம்பவத்திற்குள் ஆண்டுகள் பல ஆயின. வந்த மாட்டுக்கார தம்பதிகளுக்கும் ஆறு