பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


காரணம். ஆகவே ஆசையை அழித்துவிடு’ என்று புத்தர் கூறினாலும், ஆசையை அழிக்கும் ஆசைப்பட்ட அவரால் முடியவில்லையே! ஆட்டிப் படைக்கும் ஆசைக்குள் அகப்பட்டுக் கொண்டு ஆவலாய் பறக்கின்றவர்களாகத்தானே நாம் வாழ்கிறோம்!

இந்த மனித நெஞ்சம் இருக்கின்றதே! அது யாருக்கும் அஞ்சாத ஒன்று. படுத்துக்கொண்டு அசை போடும் பசு மாட்டைப் போல, நினைத்த இடத்திலே திமிர் முறிக்கும் நாயைப் போல, கொம்பு விட்டுத் தாவித் திரியும் குரங்கைப் போல, கண்ட இடத்தில் கத்தி மகிழும் கழுதையைப் போல, ‘அறுக்கப் பிடித்தாலும் கத்தும்’ அடைக்கப் பிடித்தாலும் கத்தும் என்று கூறுகின்ற கோழியைப் போல வாழ்கிறது மனித மனம்.

அந்த மனத்தில் ஆசை நினைப்பு ஏற ஏறத் தவிப்பும் மீறிக் கொண்டே போகின்றது. அந்த ஆசை நெஞ்சை அடக்கி விட்டால் எந்த நோயும் வராதுதான்! மனதைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது என்பார்கள். ஆனால் நல்லதை நினைத்துக் கொண்டு வாழலாம் அல்லவா! நல்லதை நினைத்து வாழ்ந்தால் அவர்கள் வாழ்வு எப்படி மாறும்? இல்லையென்றால் கற்பக மரத்தின் கீழே இருந்தவன் கதை போலத்தானே வாழ்க்கையும் அமைந்து விடுகிறது. அவன் கதை எப்படி?

அதையும் தெரிந்து கொள்வோமே.