பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

17


நினைக்கத் தெரியாத அவன் தவிப்பால், குறை வாழ்வுடன் போய் விட்டான்.

அவன் இருந்த இடமோ கேட்டதைக் கொடுக்கும். கற்பக மரம் என்பதை அவன் உணரவில்லை. ஆசைத் தவிப்பால் அனைத்தையும் இழந்ததுடன், பாவமாகத் தன்னையே பலியாக்கிக் கொண்டான்.

நமது வாழ்க்கையில் உடலும் ஒரு கற்பக மரம் போல்தான். கேட்ட இன்பங்களையெல்லாம் கொடுக்கின்ற உடல்தான். நாம்தான் கொடுக்கின்றதையெல்லாம் வைத்துக் கொண்டு அதிகமாகக் கெடுத்துக் கொள்கின்றோம்.

திடமாக இருக்கும் உடலால், மனத்தை அடக்கி வைக்க முடியும். திடமில்லாத உடலின், பலவீனத்தை வைத்து, மனம் அடிமைப்படுத்திவிடும். இது தெரியாததால்தான், தேகத்தைப் பற்றி பலர் சிரத்தைக் கொள்வதில்லை. மாறாக, அடிமையாக உடலை எண்ணி, அதனை வதைத்து, தாங்களும் வாழ்விழந்து போகின்றார்கள்.

பொய் நோயால் புகுந்துவிடும் மனத்தைக் கட்டுப்படுத்தி வாழ்வதென்பது எளிதல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் நமக்குரிய சக்தியினை நாம் உணர்ந்து கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். நமக்கு என்ன வேண்டும். என்பதைத் தெரிந்தெடுப்பதில் குழப்பமோ அவசரமோ கொள்ளக்கூடாது. எதையும் நிதானமாக சிந்திக்க, நடக்க, செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால் தவிப்பினால் இழப்புதான் அதிகமாகுமே தவிர குறையாது.

பல்லாண்டு காலம் கடுந்தவம் புரிந்த கும்பகர்ணன் முன்னே கடவுள் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று