பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கேட்டாராம். சாகாத வரம் கேட்டிட வந்தவனல்லவா! என்னை யாரும் வெல்லவும் கூடாது, கொல்லவும் கூடாது என்ற குறிக்கோளின் தவிப்பிலே குளித்துக் கிடந்தவனல்லவா? தன் தவத்தை மெச்சித் தானாக வந்த இறைவனைப் பார்த்ததும், அவனது தவிப்பு மிகுதியாயிற்று, பதட்டமும், பரபரப்பும், ஆசையும் புயலாயிற்று.

நித்தமும் வாழவேண்டும் என்ற பொருளான நித்தியத்வம் வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக, நித்தமும் தூங்கிக் கிடக்கின்ற பொருளில் நித்திரைத்துவம் வேண்டும் என்று கேட்டு விட்டானாம். வரமும் வந்து விட்டது. பிறகுதான் இழப்பு தெரிந்தது, அதன்பின் தூக்கம் ஆறுமாதம், இயக்கம் ஆறுமாதம் என்று மாற்றிக் கொண்டதாகப் புராணம் கூறும்.

அப்படித்தான் தவிப்பில் திளைப்பவர்கள், இழப்பில் மாட்டிக் கொள்கின்றார்கள். அந்தநிலை வராமல் இருக்க நாம் எங்கே இருக்கிறோம்? என்ன செய்கிறோம் என்ற நினைவுடனேயே வாழ வேண்டும்.

ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை மனதுக்கு ஊட்டிவிட வேண்டும். அத்தகைய பண்புகள் ஒருவனை ஆனந்த வாழ்வில் வளர்த்து விடும்.

அவசரப்பட்டு எடுக்கின்ற முடிவுகள் அனைத்தையுமே கெடுத்துவிடும்.

இல்லையென்றால் வரம் பெற்ற ஒரு முனிவர் ஆத்திரத்தில் தடுமாறித் தரமிழந்து போனது போலல்லவா ஆக நேரிடும்?