பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சொல்லி வரவேண்டும் என்ற நப்பாசையின் நமைச்சல். பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு வெளியே வந்தாள் தங்கம். என்ன ஆச்சரியம்! அவள் மகள்தான் எதிரே நின்று கொண்டிருந்தாள். அழுத கண்கள். சற்று வீங்கிய தோற்றத்தில் அவள் முகம் தென்பட்டது.

என்ன சமாசாரம் என்று மகளை இறுக அணைத்தபடிக் கேட்டாள் தங்கம். என்ன சொல்வது? உன் மருமகன் பக்கத்திலே போக முடியவில்லை என்றாள் மகள். ‘ஏன்? அவர் என்ன பாம்பா? பேயா? அழகும் குணமும் உள்ள ஒருவரை அல்லவா உனக்காகத் தேர்ந்தெடுத்தேன்’ என்றாள் தங்கம்.

தாய் சொல்லி முடிப்பதற்குள்ளே, அழகும் குணமும் எதற்கு! அருகிலே போகவே முடியவில்லை, பேச வாயைத் திறந்தால் பத்து கிலோ மீட்டர் தூரம் வாய் நாறுகிறது. எப்படி அவர்கூட வாழமுடியும்! நான் இனிமேல் அவருடன் வாழப் போகமாட்டேன். போகவே மாட்டேன் என்று சத்யாகிரகம் செய்ய ஆரம்பித்தாள். தங்கத்தின் தலையில் இடிவிழுந்தது போலாயிற்று.

பல் விளக்காத மருமகனிடம் போய் பல்லை விளக்குங்கள் என்று எப்படி சொல்வது? அது அவமரியாதை ஆயிற்றே? இதைக் கூடவா போய் சொல்வார்கள்! ம்...மகளே நேரில் சொல்லியிருக்கலாம். இதை நான் போய் சொல்வது என்றால் நன்றாக இருக்காதே! ஆனால் ஏதாவது தந்திரம் செய்து ஒரு ஏற்பாடு செய்திட வேண்டும் என்று தங்கம் தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டாள்.