பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

41



மறுநாளே மருமகனும் மனைவியைத் தேடிக் கொண்டு வந்துவிட்டான். வாருங்கள் என்று வரவேற்றாள் தங்கம், மாமியார் என்று மிகவும் மரியாதையுடன் வணங்கிய மருமகனைப் பார்த்ததும். ‘இப்படி குணமுள்ள பையனுக்கு இதுபோல ஒரு கெட்டப் பழக்கமா’ என்று நினைத்தபடியே வணங்கி வரவேற்றாள். மகளோ, அவன் பக்கமே போகவில்லை.

‘நான் அவனோடு வாழவே மாட்டேன்! அழுக்கும் புண்ணாக்கை கட்டிக்கொண்டு இனி நான் சேர்ந்து வாழவே மாட்டேன்’ என்று அடம்பிடித்தாள் மகள். ஆனால், உங்களை எப்படியும் சேர்த்து வைக்கிறேன் பார் என்று சபதம் செய்தாள் தங்கம். எப்படி?

தங்கம் தன் மகளை அழைத்தாள், ‘இந்த ஒருமுறை மட்டும் நான் சொல்வதைக் கேளம்மா’ என்று தயவுடன் கேட்டுவைத்தாள். அன்பான அன்னையின் கெஞ்சலைப் பார்த்தவுடன், அலமுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘அப்படியே செய்கிறேன்’ என்பதுபோல தலையை அசைத்து விட்டாள். தங்கம் தன் திட்டத்தின்படி செயல்படத் தொடங்கினாள்.

பக்கத்து ஊரிலே மாரியம்மன் திருவிழா நடக்கிறது. அந்த ஊரில் அம்மனுக்கு அடுத்தபடியாக விசேஷமானது செங்கரும்புதான். அவ்வளவு இனிப்புள்ள செங்கரும்பை பக்கத்து கிராமத்து மக்கள் அனைவரும் கட்டுக்கட்டாக வாங்கிக் கொண்டு போவார்கள். நீங்களும் ஆளுக்கு இரண்டு கரும்பு வாங்கித் தின்றுவிட்டு, ‘எனக்கு இரண்டு வாங்கி வாருங்கள்’ என்று மேலும் பல