பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

85



2. வாழ்க்கை என்றால் பல பிரச்சினைகள் வரத்தான் செய்யும். எதிர்பாராத கவலைகள் இன்னல்கள், அதிரடித் தாக்குதல்கள் நிகழத்தான் செய்யும். அதனால் ஏற்படுகின்ற அச்சம், கோபம், மனஸ்தாபம், மற்றும் எதிர்பார்த்து ஏங்கும் மனக் கவலைகளை எல்லாம் சாப்பாட்டு நேரத்தில் கொண்டு வந்து சங்கடப்படக் கூடாது.

படகு நன்றாக இருந்தால்தான் பயணம் நன்றாக இருக்கும். ஆடிச் சுழன்று போகும் நிலையில் உள்ள படகு, எப்பொழுதும் ஆபத்துதான். அதுபோலவே, உடலும். உடலை நன்கு காத்துக் கொண்டால்தான் உலகப் பயணமும் உவப்புடன் திளைக்கும். திடகாத்திரமான தேகத்திற்கு சிறந்த அடிப்படை உணவு அல்லவா!

ஆகவே, குழப்பமான மனோநிலையுடன் சாப்பிடக் கூடாது. அது வயிற்றுக்குள் பல மாறுதல்களை வரவழைத்து வயிற்றைக் கெடுத்து விடும். வேதனைகளைக் கொடுத்து விடும் என்பதை உணர்ந்து, சாப்பிடும் இடத்திற்குப் பல பிரச்சினைகளைக் கொண்டு வராமல், மகிழ்ச்சியுடன் உண்ண வேண்டும்.

3. தொடர்ந்து, கவலையும் துயரமும் கொண்டு வாழ்கின்ற உணர்வு உள்ளவர்களை (அல்சர்) குடற்புண் ஆக்ரமித்துக் கொள்கிறது என்கிறார்கள். குடற்புண்ணைக் கொண்டோடி வாங்கிக் கொள்வதால் உங்களுக்கென்ன லாபம்? சம்பாதிப்பது சாப்பிடத்தானே! சாப்பிடும் போது சங்கடத்துடன் சந்தர்ப்பத்தை ஏன் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

4. மிகவும் களைத்துப் போயிருக்கின்ற நேரங்களில் அல்லது மனம் உடைந்து போயிருக்கின்ற சமயங்களில்,