பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

89


வகைகள் மற்றும் தானிய வகைகளிலும் இச்சத்து நிறையக் கிடைக்கிறது. இனிப்புப் பண்டங்களான கேக், பிஸ்கட், சர்க்கரை, ஜேம், டின்னில் அடைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள் ஆகியவற்றிலும், நிறைய கிடைக்கின்றன.

கொழுப்புச் சத்தானது கறி, வெண்ணெய், ஆலிவ் எண்ணெயிலும் உணவு வகைகளிலும் கிடைக்கிறது. இச்சத்து உடலில் எரிந்து, வெப்பத்தையும் வலிமையையும் தருகிறது. தேவைக்காக நாம் இதனைத் தேடி உணடால், தேகம் நல்ல நிலையில் இயங்கும். நலமளிக்கும்.

மூன்றாவதாக உடல் காக்கும் உணவு வகைகள் (Protective foods) இச்சத்தானது விட்டமீன் மற்றும் மினரல்ஸ் ஆகும். இவற்றை கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, குளோரின், அயோடின், பாஸ்பரஸ், சல்பர் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

உதாரணத்திற்குப் பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் கால்சியம் சத்து, உதவுகிறது. இது பச்சைக் காய்கறிகள். பால், பாலாடைக் கட்டிகளில் இருக்கின்றன.

விட்டமீன் A, B, C, D. என்பது பற்றியெல்லாம் நீங்கள் விவரமாகத் தெரிந்து கொண்டிருப்பதால், இங்கு விளக்கமாகத் தராமல், குடிக்கும் நீர் பற்றிய குறிப்புகளைக் கூறுகிறேன்.

நமது உடலானது முக்கால் பங்குக்கும் மேலாக நீர்ப்பகுதியில் நிரப்பப்பட்டிருக்கிறது. இரத்தமும், ஜீரண சுரப்பிகள் சுரக்கும் ஜீரண நீர்களும், மற்றும் லிம்ப்