பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O இயற்கையோ நம்மிடம் அன்னேயாக வருகிறது. அன்பினேப் பொழிகிறது. ஆறுதல் தருகிறது. ஆனந்தம் அளிக்கிறது. அழகு ஒவியமாகத் திகழ்கிறது. இயற்கையோ ஆசிரியையாக வருகிறது. அறிவினைத் தருகிறது. அனுபவத்தை அளிக்கிறது. ஆனந்த வழியைக் காட்டுகிறது. அற்புதக் கற்பனையை மீட்டுகிறது. அமுத வாழ்வை ஊட்டுகிறது. என்ன செய்து என்ன பயன் ? இந்த உலக வாழ்க்கை, எப்படியோ மனிதர்களே பாடாய். படுத்துகிறது. புரியாத புதிராய், முறையில்லா சதிராய், முதிராத கதிராய், விளையாத பயிராய் மக்களுக்குத் தெரிந் தாலும், வாழ்க்கை இருந்தாலும், அது நமக்கு விழுமிய கங்களே மட்டும் விளைத்துக் கொண்டு தான் விளங்கு கிறது. துலங்குகிறது. என்ருலும், மனிதனுக்கு ஏன் இந்தக் கருத்து புரிய மாட்டேன் என்கிறது ? வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் நமக்குப் புரியவே இல்லை என்கிற பொழுது, வேறென்னதான் செய்ய முடியும் ஐ பிறப்பு நம் கையில் இல்லை ! பிறந்து பல ஆண்டுகள் கழித்தே நமது நிலைமை, வளமை, பெருமை, திறமை, சிறுமை, எல்லாமே கொஞ்சம் புரிகிறது ! இறப்பும் நம் கையில் இல்லை. இன்றிருப்போர் நாளே இல்லை என்கின்ற பெருமையை உடைய இந்த உலகத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிருேம் ! இருந்தபோதிலும் நாம் ஆயிரம் கன வுகள் காண்கிருேம். ஆயிரம் திட்டங்களை தீட்டுகிருேம். ஆயிரக்கணக்கான செல் வங்களே க் குவிக்கிருேம். இருந்தும் என்ன பயன் ? -