பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 நம்பிக்கைதான் நம் செயல்களை நடத்திக் கொண்டிருக் கிறது. மனிதன் நினைக்கிரு ன். இறைவன் முடிக்கிருன். என்பதுபோல, மனிதன் நம்பிக்கையை மூலதனமாக வைத்து செயல்படுகிருன். அதற்குரிய முடிவும் பலனும் ஆண்டவனிட மிருந்தே வருகிறது. என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். அப்படித்தான் வாழ வேண்டும். பஸ்ஸில், ரயிலில் ஏறி உட்கார்ந்த பிறகு, டிரைவரிடம் நமது உயிரைப் பற்றிய கவலையைத் தந்துவிட்டு நிம்மதியாகப் பிரயாணம் செய்வதுபோல, நாம் நமது வாழ்க்கைப் பயணத் தின் பாதுகாப்பை இறைவனிடம் தந்துவிட்டால், எவ் வளவோ நிம்மதி கிடைக்கும். எவ்வளவு காலம் இங்கு வாழ் கிருேம் என்பதில் இல்லை மகிழ்ச்சி. எப்படி வாழ்கிருேம ? எவ்வளவு இன்பமாக வாழ் கிருேம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கையானது ஒருவர் வாழ்கின்ற வருடங்களே வைத்துக கணக்கிடப்படுவதில்லை. அவர் மகிழ்ச்சியாக வாழ் வதை வைத்துத் தான் போற்றப்படுகிறது. ஒரேநாளில், சூரியோதயம் தொடங்கி சூரியன் மறையும் நேரத்திற்குள்ளாக, வாழ்நாளில் படுகினற அத்தனை கஷ்டங்களேயும் படுகின்ற ஆட்கள் ஏராளமாக இந்த உலகில் இருக்கின்ரு கள். ஒரே நாளில் கிழத்தனம்பட்டு. முதுமை யடைநதவர்களாகி விடுபவர்களும் உண்டு. அதிவேகம் - அதிசோகம் - மரணம என்பதுதான் வாழ்க்கை என்ருல், அது மனித வாழ்க்கையல்ல. ஐந்தறிவுள்ள மிருக வாழ்க்கையே தான். மனித வாழ்க்கையின் இலட்சியம் மகிழ்ச்சியோடு வாழ் வதுதான், அந்த மகிழ்ச்சியே இந்த உலகில் விலையில்லாத ஈடிணையற்ற பொருளாகும். அப்படியென்ருல். மகிழ்ச்சி என்ருல் என்ன என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா ?