பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł 7 களும் தொடர்ந்து நடந்திடும் தாக்குதல் களம் தான் நமது வாழ்க்கையாகும். அதனுல்தான் வாழ்க்கையை சாகரம் என்று பெரியோர் அழைத்தனர். சாகரமாகத் தோன்றும் வாழ்க்கையை மோகனமாக மாற்றிக் கொள் ள என் ன செய்ய வேண்டும் ? யோசனையும் அதற்கேற்ற மதியூகமான செயலும் வேண்டுமல்லவா ! ஒரு மொழியில், எழுத்துக்கள் பல இருக்கின்றன. எழுதப் படுவதால் எழுத்து என்று அவைகள் பெயர் பெற்றன. எழுத்துக்கள் சேர்ந்தால்தான் சொல் ஆகும். சொல்லுக்குத் தான் பொருள் உண்டு. ஆளுல் சில எழுத்துகளுக்கோ தனியாக இருக்கும்பொழுதே அர்த்தம் உண்டு. ஒரு சில எழுத்துக்களைப் பார்க்கும் பொழுது. சிறந்த பொருள் உள்ளது போலத் தெரிகிறது. ஆராய்ச்சியின் முடிவும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 'ஆ' என் கிருேம். ஈ என் கிருேம். ஐ என் கிருேம். மா என் கிருேம். அதற்கு என்ன அர்த்தம் ஆ என் ருல் பசு. ஐ என்ருல் உயர்ந்த, மா என் ருல் மாமரம், குதிரை என்பன போன்ற பொருள்கள் உள்ளனவே ! புரியாத நிலையில் அது வெறுஞ் சொல், பொருள் தெரிந்த நிலையில் அது நறுஞ் சொல், அருஞ் சொல் ஆகிறது. அல்லவா ! வாழ்க்கையும் மகிழ்ச்சியும் அப்படித்தான். மேலோட்ட மாக அதைப்பார்க்கும் பொழுதே, வாழ்க்கை;என்பது ஒரு புனித ஜீவிதமாக அல்லவா தோன்றுகிறது ! "நாம் நமது வாழ்க்கையின் சிறப்பைப் பற்றி, மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொள்கிருேம். அதுவும் காலங் கடந்த பிறகே புரிந்து கொள் கிருேம். ஆனால், வாழ்வின்