பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


அந்த அளவுக்கு மனித சமுதாயம், தன்னைப் போட்டுக் குழப்பிக் கொண்டு, கவலைகள் தம்மை குடைந்தெடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்து விட்டு, அங்கலாய்த்துக் கொண்டு தான் கிடக்கிறது. இதையும் மீறி, இன்னும் ஒருபடி மேலே சென்று ஐார்ஜ் எலியட் என்ற மேதாவி கூறுகிருன், "மகிழ்ச்சியான பெண்-மகிழ்ச்சியான நாடுகள் என்று எந்த வரலாற்றிலுமே கிடையாது’ என் கிருன். அப்படியால்ை, மனிதன் மகிழ்ச்சியாகவே வாழ முடியாதா என்ருல், ஏன் முடியாது ? முடியாது என்பதற்கு முடிவு கட்டுவதுதானே மனித அறிவின் முதிர்ச்சி நிறைந்து இருக்கிறது. மண்ணைக் கு ைட கி ரு ன். விண்&னச் சாடுகிருன். அந்தரத்தில் ஆயிரம் உயிர்களைத் தேடுகிருன். கடலில் மிதக்கிருன். நீருக்குள் நாள் கணக்காகக் கிடக்கிருன். அந்த அற்புத அறிவு, ஆற்றல், விவேகம் விற்பன்ன முறைகள், வாழ்க்கைக்கு பயன்படாமலா போயிற்று ? அல்லவே அல்ல ! அல்ல ! நமது மனம் படுத்தும்பாடு, பணம் படுத்தும் பாடுதான் அவனே துன்பத்தில் ஏற்றி வைத்து, மாற்றி வைத்து, தூற்றியும் வைத்திருக்கிறது. 'நாம் வாழவே இல்லே. வாழ்வதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிருேம் என்று சொல்கின்ற பாஸ்கல் என்பவரின் வார்த்தைகளில் உண்மை இருக்கத்தான் இருக்கிறது. இந்த நிலைமையில், மகிழ்ச்சி என்பது என்ன என்று நாம் ஆராய வேண்டித்தான் இருக்கிறது. மகிழ்ச்சியா ? அது முடியாது என்கிறவர்கள் பேச்சை நாம் நம்ப வேண்டாம். முடியும் என்று முயலும்போது, மகிழ்ச்சியைப் பற்றி நாம் என்னவென் ருவது புரிந்து கொள்ளலாமே !