பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


ஒட்டத்தை நிறுத்துவதோ, வாட்டத்தில் தன்னை ஆழ்த் திக் கொள்வதோ, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவுவது ஆகாது அல்லவா : அந்த வேதனை மேடைதான் சோதனை மேடுதான் சுற்றுப்புறச் சூழ்நிலைகள். சில இடங்களில் மடுவாகத் தோன்றும். பல இடங்களில் மலையாகத் தோன்றும். தாண்டவேண்டிய இடத்தில், தாண்டி, ஒதுங்க வேண்டிய இடத்தில் ஒதுங்கி, ஒதுக்க வேண்டிய இடத்தினை ஒதுக்கிக் கொண்டு போவோர்தான் குழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சந்தோஷ மடைபவர்கள் ஆவார்கள். சூழ்நிலைகள் மனிதர்களுக்கு விளை யாட்டு போன்ற தாகும். மனிதன் அவற்றுடன் விளையாடத் தெரியாவிட்டால் சூழ்நிலைகள் மனிதனே விளையாடி விடும். அதனுல்தான் பெரியவர்கள் சொல்கின் ருர்கள் இப்படி. சூழ்நிலைகளுக்காக மனி தன் தோற்று விக்கப்படுவதில்லை. சூழ் நிலையை மனிதன் தோற்று விக்கிருன் . அதன் மூலமாக அவன் வாழ்க்கையை அனுபவிக்கிருன். மகிழ்கிருன். முன்னேறுகிருன், புகழ் பெறுகிருன். சாதாரண மனித கை இருந்து, சக்கரவர்த்தியாக மாறி, உலகம் முழுவதையும் ஆள வேண்டுமென்று துடித் சானே நெப்போலியன் போன பர்ட். அவன் கூறின்ை. 'நான் சூழ் நிலைகளை உருவாக்குகிறேன்' என்று. ஆமாம்-சூழ் நிலையை உருவாக்கத் தெரிந்த மனிதனிடம் வாழ்க்கையானது சர்க்கஸ் சிங்கம் போல், அடங்கிக் கிடக் கிறது. வித்தைகள் புரிகிறது. இல் அலயென்ருல். சிங்கத்திடம் இரையாகும் மனிதர்களைப் போல, சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவர்கள் காலத்தின் கோரப்பிடிக்குள் இரையாகிப் போய் விடுகின் ருர்கள்.