பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


ஆமாம்! துன்பம் யார் மடியில் விழலாம். யார் அணப்பில் காவலாம், யாரைக் கட்டி அணைக்கலாம் என்றல்லவா ஆல வட்டம் போட்டு அலகிறது. - . "கவலைகளோ இறந்தகாலத்தையே நினைக்கின்றன,. குழப்பங்களோ எதிர்காலத்தையே நினைக்கின்றன. நம்பிக்கை மட்டுமே நிகழ் காலத்தை நினைக்கின்றது என்கின்றகருத்தினை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். "சாத்தானின் கரங்கள் என்னை இழுப்பதை உணர் கிறேன். ஆனல் அந்தப் பிடியிலிருந்தும் கடியிலிருந்தும் ன்ன்னுல் விடுபட முடியவில்லையே' என்று மேல் நாட்டறிஞ ர்ான ஜார்ஜ் வில்லியம் என்பவர் கூறுகின் ருர். - குழப்பத்திற்கும் குறுக்கு வழிகளுக்கும், விதி மீறல்களுக் கும் விதண்டா வாதங்களுக்கும் தலைவன் சாத்தான் என்பார் கள். அவனது அருமைத் துாது வர்களே கவலைகளும், குழப்பங்களும். அவற்றைத் சாமர்த்தியமாகத் தவிர்த்து விட்டால், கவலை எனும் காரிருள் கலைந்து விடும். மகிழ்ச்சி எனும் இன்பப் பொழுது விடிந்து விடும். நறுமண மலர்கள் போல நாட்கள் வந்து போகும். தேன் சுவை உணவுகள் போல உணர்வுகள் நம்மைச் சூழும். வாழ வைக்கும். ஆகவே, கவலையைப் போக்கும் கலைகளே, மகிழ்ச்சியை உண்டாக்கும் சூழ்நிலகளே நாம் இனி தொடர் ந்து காண்போம்.