பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகம் கவலைப்படுகிறேனே, அது நடக்கவே மாட்டேன். என்கிறது. ஆமாம்! நடப்பது நடந்தே தீரும் என்ற ஒர் உண்மையை. நாம் அறிந்து, உணர்ந்து, தெளிந்து நடந்துகொண்டோ மானுல் கவலை என்ன செய்யும் ? வாழ்க்கையைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும், அதை மிகவும் எளிதாகப் புரிந்து கொண்டு இனிதாக வாழ்ந்து விடலாம். அது எப்படி ? அந்த எளிய வழி தான் என்ன ? கவலையைப் பார்த்து சிரித்துவிடுவதுதான். அதல்ைதான் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று பாடினர் வள்ளுவர். ‘சாக விரும்பியவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம்' என்பார்கள். அதுபோல சிரிக்க முடிந்தவனுக்கு இந்த வாழ்க்கையே சொர்க்கம் ஆகிவிடுகிறது . நம்பிக்கை வேண்டும். நல்ல நம்பிக்கை வேண்டும். ஒவ்வொரு பறவைக்கும் உரிய உணவை இறைவன் கொடுத்துக்கொண்டுதான் வருகிருன். ஆல்ை இறைவன் வந்து தனது கூட்டிலே இரையைப் போடுவார் என்று எந்தப் பறவையும் காத்திருப்பதில்லை, கவலைப்படுவதில்லை. பறந்து, திரிந்து, இரையைப் பெற்று, உண்டு உறங்கி மகிழ்கின்ற பறவையாக நீங்கள் வாழவேண்டும். நல்ல உழைப்பு தேகத்தை உறுதிப்படுத்துகின்றது. அது போலவே துன் பங்களும் மனிதனது மனத்தை வலிமைப். படுத்துகின்றன. வலைவிரிக்கும் கவலையை விரட்டி அடிப்போமே! மனிதன் முயன்ருல் முடியாதது என்ன உண்டு இந்த உலகத்திலே .