பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நம்மை அது என்ன செய்யும் ? வாலே சுருட்டி மடக்கிக் கொண்டு விலகி ஒடும் நாயைப் போல, கவலை ஒடி விடும். ஒருமுறை நாம் முடிவொன்றை எடுத்து விட்டோமானுல், நஷ்டமோ, கஷ்டமோ, அதை செயல்படுத்திட முயல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், நாமே நம்மைக் கவலைக்குழிக்குள் காலூன்ற வைத்துக் கொள்வதாகிவிடும். 'திரும்பத் திரும்ப எடுத்த முடிவைப்பற்றி நினைப்பது, தயக்கம் காட்டுவது-தடுமாறி நிற்பது.சந்தேகம் கொள்வது, தன்னைப்பற்றித் தாழ்வாக நினைப்பது.தன் செயலிலே தாழ்வு மனப்பான்மை கொள்வது ! இவைகள் தான் கவலையை வாவென்று அழைக்கும் கலிகாலக் கன்னிகளாகும். சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை’ என் பார்கள். சோம்பலாயிருப்பவனின் மூளையைவிட, ஒரு முடிவுக்கு வரத்தெரியாத புத்திசாலியின் மூளையும் மிகமிகக் கொடுமையானது தான். 'அளவுக்கு மீறில்ை அமுதமும் நஞ்சு' என்பார்கள். இந்த வாசகம் உணவுக்கு மட்டுமல்ல. நினைவுக்கும் பொருந்தும். ஒரு பிரச்சினையைப்பற்றி கொஞ்சம் அதிகமாக நினைக்கத் தொடங்கி விட்டாலே, கூட வருவது கவலையும் குழப்பமும் தான். எடுக்கவும் தூக்கவும் இருந்தால், குழந்தை ஏங்கி ஏங்கி அழும் என்கிற பழமொழியைப் போல, முடிவெடுக்க மேற்கொள்ளும் பிரச்சினைக்கே முத்தம் கொடுத்துக் கொண்டி ருந்தால், முடிவு மட்டும் அல்ல, விடிவும் தோன் ருது. தோன்றவே தோன் ருது.