பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 'ஒரு நேரத்தில் ஒரு வேலை - இதுதான் இயற்கையின் சட்டம், ஒரு படகிலே பயணம்-அதுதான் உத்தமமான பயணம், பல படகிலே பயணம் செய்ய நினைத்தால்-இரண்டு படகிலே கால்களை வைத்துக் கொண்டு படகுகளை ஒட்டி குல்-என்ன ஆகும் ? உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி ஒரு வேலை யைச் செய்யும் பொழுது, அது பயனுள்ளதாக அமைய, வேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எழுச்சியே. ஏற்படும். அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுப்பது இதமாக இருக்கும். அதுபோலவே, கவலைப்பட்ட மனதுக்கு காரியம் ஆற்றுதல் மிகவும் களிப்பினைத் தரும். காட்டிலே திரிகின்ற யாகனகள் செடி கொடி மரங்களை ஒடித்து அழித்துச் செல்வது போல. கவலைகொண்ட மனமும், பயம். வெறுப்பு, பொருமை, எரிச்சல், கோபம் முதலிய வற்றுடன் திரியும். இத்தகைய கவலைகள் உடலை வெறுங் கூடாக ஆக்கி: விடும். கூரையில்லா வீடாக மாற்றிவிடும். பல்லில்லா வாயாகவும், வைத்து விடும். "கவலை வருவதற்குரிய காரணங்களிலே ஒன்று எது தெரியுமா? சோம்பலாக உட்கார்ந்து கொண்டு நாம் சந்தோஷமாக இருக்கிருேமா என்று ஆராய்கின்ற சமயத்தில் தான்’ என் கிருர் பெர் ட்ைஷா. சோம்பலை அறு. சுறுசுறுப்பாய் இரு இதை நாம் வேத மந்திரமாகக் கொண்டு விட்டால். நம்மை கவலை என்ன செய்யும்? கவலையை விரட்டும் அலே இது தான். சோம்பலை அறுப்போம். சுறுசுறுப்பாயிருப்போம்.