பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 எண்ணமிடுவது, மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே உள்ள இயல்பு தான். வசதியுள்ளவனைப் பார்த்து, அந்த சிறந்த நிலை நமக்கு இல்லையே என்று வருத்தப்படுவது போல, ஏழை ஒருவனப் பார்த்து, "அப்பாடா,! நாம் அவனைப் போல் இல்லையே என்று மகிழ்ச்சியடையும் மன நிலை இல்லாததால்தான், நம்மை கவலையும் கஷ்டமும் வந்து குழப்புகின்றன. உயிரை எடுக்கின்றன. 'தம் மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்று அக மகிழ்க ! என்பது ஒரு பாடல். தம்மை விட வாழ்வில் தாழ்ந்தவர்களைப் பார்த்து, அவர் களைவிட நாம் உயர்ந்த நிலையில் இருக்கிருேம் என்று எண்ணி மகிழ்வது தான் திருப்தி என்கிருர்கள். பாலுக்கு சர்க்கரை இல்லையே என்று வருந்துபவர் போல, கொஞ்சம் இருக்கின்ற கஞ்சிக்கும் உப்பு இல்லையே என்று அழுகின்ற ஏழைகளும் இருக்கத்தானே இருக்கின் ருர்கள். காலுக்கு செருப்பில்லேயே என்று கலங்குவோர் உண்டு. அதே சமயத்தில் இருக்கின்ற செருப்பினைப்போட தனக்கு கால்கள் இல்லையே என்று மயங்கும் முடவர்களும் இவ்வுலகில் உண்டே ! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இல்லாமை, உண்டு இயலாமை உண்டு ! யாருக்கு இங்கே கஷ்டம் இல்லை ? இருந்தாலும், நாம் நல்ல தையே நினைக்க வேண்டும். பல வீனப்பட்ட மனதுள்ளவர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சி 'யாகவோ இருக்க முடியாது. ஏனெனில், அவர்கள் எப்பொழு -தும் சபலத்திற்கும் சலனத்திற்கும் ஆளாகிக் கொண்டே இருப்பதால் தான்.