பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 3 அன்பு தான் நமது வாழ்க்கையாக அமைந்திருக்கிறது. அதிலே தான் நாம் வாழ்கிருேம். அதனுடே தான் நாம் உலவுகிருேம். அதல்ை தான் நாம் அதிக உற்சாகம் பெறுகிருேம். அது தான் உலக வாழ்வை இன்ப மயமாக மாற்றுகிறது. அன்பில்லாத நெஞ்சம் வெறுப்பென்னும் புதர் படர்ந்த காடாக விளங்குகிறது. அது அலமோதும் கடலாக மட்டு மல்ல, புயல்மோதும் கடலாகவும் குமைந்து கிடக்கிறது. அதற்கு அமைதியே கிடையாது. ஆமாம். அமைதி அங்கே. வரவே வராது. அன்பில்லாத. வெறுப்புள்ள, அகங்காரம் கொண்ட நெஞ்சம் யாருடனும் சேர விரும்பாது. தனியே தான் அலை பாய்ந்து கிடக்கும். எரிச்சலும், ஏமாற்றமும், எந்நாளும் அந்த மனதை சூழ்ந்து கொண்டே இருக்கும். அந்த வெறுப்பான நெஞ்சத்தால் தனிமை மட்டுமா வருகிறது ? தவிப்பும் கூடவே தொடர்கிறது. பயங்கரமான பகற்கனவுகள், புடைத்தெழும் நரம்புத் தொகுதிகள், பசியில்லா இரப்பை, பதட்டப்படும் நினவுகள், உடல்வலி, என்றெல்லாம் துன்பங்கள் தொடர்கின்றன. துளைக்கின்றன. ஆனல் அன்பு கொண்ட நெஞ்சமோ ஆனந்த அருவி யாக விழுகிறது. அனைவரையும் அனேக்கிறது. அமைதியில் குளிக்கிறது. அருமையுடன் அழைக்கிறது. அளிக்கிறது. அன்பு நெஞ்சம் சுயநலம் பார்ப்பதில்லே. அடுத்தவரை அருவெறுப்புடன் நினைப்பதில்லை. அடுத்தவர்களின் செயலை வெறுப்பதில்லை. தீய வழிகளில் செல்பவரைத் தடுக்க முயல் கிறது. நல்லவைகளைப் பாராட்டுகிறது. தூயவழிகளுக்குத் துணைபோகிறது. நம்பிக்கை வைக்கிறது. நடைமுறையில் நேர்மையை நினைவுறுத்துகிறது, அன்புக்குப் பெருமை அதிகம். அத்துடன் திறமையும் அதிகம்.