பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 அத்தகைய அன்பு நெஞ்சத்தில் தெம்பு மிகுதியாகத் தோன்றுகிறது. தொடர்கிறது. அந்த அன்பு நெஞ்சத்தில் மகிழ்ச்சி பிறக்கிறது. சிரிக்கிறது. இந்த அன்பு நெஞ்சத்தை எப்படி வளர்ப்பது ? மகிழ்ச்சியை எப்படி பெறுவது என்பது இப்பொழுது கேள்விக் குறியாக அல்லவா வந்து எதிரே நிற்கிறது ? போலீஸ்காரருக்கு யாரைப் பார்த்தாலும் திருடளுகத் தோன்றும். ஒரு தி ரு ட னு க் கு யாரைப்பார்த்தாலும் போலீசாகத் தெரியும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் ஒருவன், யாரைப்பார்த்தாலும் இவர் டிக்கெட் சோதனை அதிகாரியாக இருப்பாரோ, என்று எண்ணி பயந்து, மிரளும் பண்பு இருக்கும். இது இயற்கை தான் . அதல்ை தான், தவறு செய்யாத பண்பு வேண்டும் என் கிருர்கள். பிறரை சந்தேகிக்க முயற்சி செய்யும் பொழுதே, நம்மை விட்டு அமைதி அகன்று விடுகிறது. நம்மை பயம் வந்து அண்டிக் கொள்கிறது. பிறரைப்பற்றி அதிகமாக, கண்டபடி கற்பனை மிகுந்து விடுகிறது. செக்கிற்குள் எள்ளாக மனம் அங்கு பிழியப்படுகிறது. பிறகு எப்படி மகிழ்ச்சி வரும் ? சந்தேக மனம் கொண்டவர்கள், தங்களே சஞ்சலப் படுத்திக் கொள்வது மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்களையும் சங்கடப்படுத்தி துன்பப்படுத்தி விடுகின்ருர்கள். அப்படிப் பட்டவர்கள், மற்றவர்களே விரும்ப முயலாவிட்டாலும், சந்தேகப்பட்டு வெறுக்காமல் இருந்தால் கூட, பாதித்துயரம் பற்றிக் கொள்ளாமல் ஒரு மாதிரியாக வாழ்ந்து விடலாம். அதே போல பெருமைப்படும் நெஞ்சமும், அதற்கும் அன்பு இல்லாமையே காரணமாக அமைகிறது. பிறரது