பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அதுபோல, எதையும் எவரிடமும் எதிர் பார்க்காமல் காட்டுகின்ற அன்புதான் தூய்மையானதாகிறது. எதிர் பார்த்து அன்பு பாராட்டுவது வியாபாரமாகிவிடுகிறது" வியாபாரம் என் ருல் நாலும் இருக்கும் என்பார்களே, அப்படித்தான் அனைத்தும் ஜோராகத் தொடங்கி அல்லல் களில் வந்து முடித்து விடும். அன்புக்குக் காரணமில்லை காரியமில்லை. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய தலையாய பண்பு அன்பு என்பதால் தான். ஆண்டவன் மகிழ்ச்சியைப் போய் அன்புக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிருன். அன்பு, ஜாடியைத் திறக்கத் தெரிந்தவர்கள் தான், திறக்க முடிந்தவர் கள் தான், மகிழ்ச்சிப் பொருளைப் பெறமுடிகிறது. மூடிய ஜாடியைச் சுற்றி சுற்றி வரும் எலிகளைப்போல். அன்பு தெரியாத மனிதர்களும் உலகைச் சுற்றிச் சுற்றி வருகின்ருர்கள். அவர்கள் முனுமுனுப்பிலும் பரபரப்பான தடி துடிப் பிலுமே வாழ்க்கை ஆட்டம் நிறைந்து கொள்கிறது. தருமரையும் துரியோதனனையும் அழைத்து. உலகில் மிக நல்லவர், மிகக் கெட்டவர்கள் என்பதைக் கண்டு வரும்படி, துரோணர், கூறினராம். உலகெல்லாம் இருவரும் சுற்றி வந்தார்கள். இருவரும் தங்களது குருவை அணுகிக் கூறினர் களாம் இப்படி. என் கனவிட எல்லோரும் நல்லவர்களாகவே தோன்று கிருர்கள் என்ருராம் தருமர், எல்லோரும் கெட்டவர்களாகத் தெரிகின் ருர்கள் என்ருனும் துரியோதனன். மற்றவர்களே நல்லவர்களாக நினைக்கத் தருமருக்குத் தோன்றியது அவர் நல்லதையே நினைத்து வாழ்ந்ததால், துரியோதனனுக்கு கெட்டவர்களாக நினைக்கத் தூண்டியது அவன் கெட்டதையே நினைத்து செய்து வந்ததால்.